திரிசாரணர் திரிசாரணீயர்களுக்கான சாரண இயக்கக் கருத்தரங்கம்
கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்
திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரியைச் சார்ந்த திரிசாரணர் திரிசாரணீயர்களுக்கான சாரண இயக்கம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சாரண இயக்க மாவட்டத்தலைவர் மற்றும் வித்யா விகாஸ் கல்விநிறுவனங்களின் செயலர் முனைவர் எஸ்.குணசேகரன் தலைமையில், மாவட்ட திரிசாரண ஆணையரும், வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான முனைவர் டி.ஓ.சிங்காரவேல் முன்னிலையில் நடைபெற்ற துவக்க விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் ப.மகேஸ்வரி காணொளி வாயிலகக் கருத்தரங்கினைத் துவக்கி வைத்தார்.
மாவட்ட உதவிச் செயலர் சி.மணியரசன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலர் து.விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்வி நிறுவன மேலாண்மை இயக்குனர்கள் முனைவர்.எஸ்.இராமலிங்கம், முனைவர்.எம்.முத்துசாமி, கல்வி நிறுவன முதல்வர் மற்றும் மாவட்ட உதவி ஆணையர் முனைவர்.பூர்ணப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இக்கருத்தரங்கில் வித்யாவிகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சார்ந்த 124 திரிசாரணர், திரிசாரணீயர்கள் கலந்துகொண்டனர். திரிசாரண ஆசிரியர் முனைவர்.முத்துராஜ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வினோத்குமார்,குமரேசன்,கெளதம் உள்ளிட்ட திரிசாரண ஆசிரியர்கள் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது.