திரித்துவபுரம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்

திரித்துவபுரம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திரித்துவபுரம்,வெட்டுவெந்நி பகுதியில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் கடைகள் வணிக நிறுவனங்கள் மீன் சந்தை உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கடை உரிமையாளர்கள் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது மேலும் தொடர்ந்து கடைகளில் சுகாதார அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்து வந்தனர் இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை குழித்துறை நகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர் வழிகாட்டுதலின் படி திரித்துவபுரம் மற்றும் வெட்டுவெந்நி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் குழித்துறை நகராட்சி உட்பட்ட அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story