சமயபுரம் அம்மன் தங்க கமல வாகனத்தில் திருவீதி உலா

சமயபுரம் அம்மன் தங்க கமல வாகனத்தில் திருவீதி உலா
சித்திரை திருவிழா
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை தேரோட்ட விழாவின் 8ம் நாள் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங் களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. 17-ந்தேதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 18-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 19-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

தேரோட்டம் முடிந்து 8-ம் நாளான நேற்று இரவு சமயபுரம் தேங்காய், பழக்கடை வியாபாரிகள், சன்னதி வீதி மற்றும் கடைவீதி பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு திருமஞ்சனம் மற்றும் பலவேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி மேள,தாளங் கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகள் முன்னே செல்ல தேரோடும் வீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கோவில் தேரோட்டத்தில் கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் எட்டாம் நாளன்று அம்மன் தங்க கமல வாகனத் தில் காட்சியளிக்கும் போது வணங்கினால் தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மன் கோவிலுக்குள் சென்றடைந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள்,குருக்கள்கள்,பக்தர்கள்,உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags

Next Story