பொங்கி வரும் கழிவு நீரால் சிக்கல்

திண்டுக்கல் மாநகர பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து அடிக்கடி பொங்கி வெளியேறும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொங்கி வரும் கழிவு நீரால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மங்கை டவர்ஸ் அருகே பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மனித கழிவுகளுடன் வெளி வருவதால் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இதுவரை 4 முறை பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. பொங்கி வரும் கங்கை காவேரி நீரை போல பாதாள சாக்கடை தண்ணீர் பொங்கி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் நடந்து செல்ல முடியவில்லை. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத் திட்டம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Tags

Next Story