சங்ககிரி அருகே லாரி -பஸ் மோதல் : மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் காயம்
விபத்துக்குள்ளான பேருந்து
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நிர்வாகிகள் 16 பேர் நேற்று இரவு கோவையிலிருந்து டிராவல்ஸ் வாகன மூலம் சென்னைக்குச் சென்றுள்ளனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் நள்ளிரவு 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராவல்ஸ் வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த கனராக லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் டிராவல்ஸ் ஓட்டுநர் உட்பட 7 பேர் லேசான காயங்களுடன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். -