லாரி - கார் மோதல் : மாவட்ட கல்வி அலுவலர் உட்பட 2 பேர் பலி

லாரி - கார் மோதல் : மாவட்ட கல்வி அலுவலர் உட்பட 2 பேர் பலி
ஆண்டிபட்டி அருகே மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் உசிலம்பட்டி பகுதியில் இருந்து தேனி நோக்கி வந்த காரும் ஆண்டிபட்டியில் இருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற மினி லாரியும் நேருக்குநேர் மோதி விபத்து காரில் வந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்கு முத்தையா மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினி லாரியில் வந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில் காரின் ஒரு பக்கம் நொறுங்கியதில் காரின் உள்ளே சிக்கியுள்ள இரண்டு பேரின் உடல்களை மீட்ட போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஆண்டிப்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story