லாரி - கார் மோதல் ; இருவர் உயிரிழப்பு
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் நேற்றைய தினம் அமாவாசையை முன்னிட்டு செஞ்சி அருகே அமைந்துள்ள மலையனூர் அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போதே செங்கல்பட்டு மாவட்டம், படாளம் பேருந்து நிலையம் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது அப்போது எமன் ரூபத்தில் அதிவேகமாக வந்த லாரி காரின் பின்னால் மோதியதில் கார் தூக்கி வீசப்பட்டு காரில் பயணம் செய்த 7 பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் படாளம் காவல் நிலையத்திற்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய 5 நபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பலியான இருவரின் பிரேதத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பின்பு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் பாட்டி பார்வதி வயது (70) , பேரன் சச்சின் (7) ஆகியோர் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என தெரியவந்தது.
மேலும் ரமணி 52, சாந்தி 50, வினோத் 23, புவனா 30 , சிப்பிக்கா 3 ஆகிய ஐந்து பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று விசாரணைகள் தெரிய வந்தது. விபத்து குறித்து லாரி ஓட்டுனரை கைது செய்த படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மழை பெய்து கொண்டு இருந்ததால் லாரி சட்டென்று பிரேக் பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் ஆங்காங்கே பேரி கேட் மூலம் தடுப்புகளை அமைக்க வேண்டும் என சக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..