ராட்சத கிரேன் மீது லாரி மோதி விபத்து-சூலக்கரை போலீஸ் விசாரணை

ராட்சத கிரேன் மீது லாரி மோதி விபத்து-சூலக்கரை போலீஸ் விசாரணை

விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் நின்றிருந்த ராட்சத கிரேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதை சூலக்கரை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் நின்றிருந்த ராட்சத கிரேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதை சூலக்கரை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராட்சத கிரேன் மீது லாரி மோதி விபத்து-சூலக்கரை போலீஸ் விசாரணை விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் மீது சிமெண்ட் ஏற்றி வந்த சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் ஆர்.ஆர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் ஆலை நிறுவனத்தில் இருந்து மதுரை பேரையூருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டையை சேர்ந்த டிரைவர் மாயன் சென்று கொண்டிருந்தார். அப்போது விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள சர்வீஸ் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் மீது திடீரென லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மாயன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் சூலக்கரை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிரைவரின் தூக்க கல்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் போலீஸ் சார்பில் கூறப்படுகிறது. விபத்தில் லாரியின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் மற்றும் கிரேன் பின்பக்க பகுதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த விபத்து சர்வீஸ் சாலையில் ஏற்பட்டதால் வாகனங்கள் அதிகமாக வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags

Next Story