குமரி அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதல்:2 பேர் காயம்
கோப்பு படம்
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (41) இவர் தலக்குளத்தில் உள்ள இரணியல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அவருடன் வேலை பார்த்து வரும் மேற்கு பரசேரியை சேர்ந்த செல்வின் ஏசுதாஸ் (56) என்பவர் ஸ்கூட்டரின் அமர்ந்திருந்தார். நுள்ளிவிளையை தாண்டி செல்லும்போது பைக்கின் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவகுமார், செல்வின் ஏசுதாஸ் ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிவகுமார் இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் தை சேர்ந்த வைத்தீஸ்வரன் (31) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.