தஞ்சாவூர் அருகே லாரி - அரசுப் பேருந்து மோதல்: 7 பேர் படுகாயம்

தஞ்சாவூர் அருகே லாரி - அரசுப் பேருந்து மோதல்: 7 பேர் படுகாயம்

விபத்தில் சிக்கிய வாகனம்


தஞ்சை அருகே அரசு பேருந்தும், லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டையில் இருந்து அரசு பேருந்து ஒன்று தஞ்சை நோக்கி இன்று காலை புறப்பட்டது. இந்த பேருந்தில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பேருந்து தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி அருகே வல்லம் -ஒரத்தநாடு நான்கு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சி நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தும் லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் லாரி சாலையில் கவிழ்ந்தது.

லாரியில் இருந்த பார்சல்கள் சாலையில் சிதறியது. மேலும், லாரியில் டேங்க் உடைந்து டீசல் சாலையில் ஓடியது. இந்த விபத்தில் அரசு பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இதில் பேருந்தின் முன் பகுதி சேதம் அடைந்தது. விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் வினோதகன், ஓட்டுநர் கார்த்திகேயன் மற்றும் ஐந்து பயணிகள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags

Next Story