நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதிய லாரி : கார், மின் கம்பம் சேதம்

நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதிய லாரி :  கார், மின் கம்பம் சேதம்

சேதமடைந்த கார் மற்றும் மின் கம்பம் 

தோவாளை அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் கார் மற்றும் மின்கம்பம் சேதமடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வடக்கூர் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் நல்லபெருமாள் (40). விவசாயி. இவர் தனது காரை நேற்று காலையில் வெளியூர் செல்ல வேண்டும் என்பதால் அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டின் ஓரத்தில் நேற்து இரவு நிறுத்தியிருந்தார். அப்போது நள்ளிரவு அந்த வழியாக வந்த கனரக வாகனம் ஒன்று ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. கார் மீது மோதிய கனரக வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

இதில் காரின் பின் பகுதி அப்பளம் போல் நொறுங்கியதுடன், கார் அந்த பகுதியில வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீதும் மோதியதில் அந்த பகுதி இருந்த மின்கம்பமும் உடைந்து விழுந்ததால் சேதம் அடைந்தது. மின் வயர்களும் அறுந்து விழுந்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் மரம் ஒன்று உடைந்து விழுந்தது. இன்று காலை சம்பவத்தை பார்த்த நல்லபெருமாள் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் உடைந்து விழுந்த மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story