லாரி கவிழ்ந்து விபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டிகள் எரிந்து நாசம்

லாரி கவிழ்ந்து விபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டிகள் எரிந்து நாசம்

விபத்து

மணப்பாறை அருகே தீப்பெட்டிகள் ஏற்றிச் சென்ற லாரி திங்கள்கிழமை நள்ளிரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டிகள் எரிந்து நாசமடைந்தன.
சிவகாசியிலிருந்து திங்கள்கிழமை இரவு தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒடிஸா மாநிலம், கட்டாக் பகுதிக்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை ஒடிஸாவைச் சோ்ந்த விமலேந்திரகுமாா்(60) ஓட்டினாா். லாரி நள்ளிரவில் மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கன்பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தீப்பெட்டி பண்டல்கள் தீப்பற்றி எரிய தொடங்கின. சிறு காயங்களுடன் லாரி ஓட்டுநா் தப்பிய நிலையில், லாரி முழுவதும் தீக்கிரையானது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். விபத்தின்போது சிதறிய தீப்பெட்டிகளை அங்கிருந்த பொதுமக்கள் அள்ளிச் சென்றனா். இந்த விபத்தில் சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Tags

Next Story