லாரி கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்
ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை லாரி கவிழ்ந்து விபத்து : 3 கிலோ மீட்டர் தூரம் 8 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்ற வருகிறது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மகராஷ்டிராவில் இருந்து ஓசூர் வழியாக கோயம்புத்தூருக்கு பஞ்சி பாரம் ஏற்றி வந்த லாரி சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்ற போது தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story