லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
செயற்குழு கூட்டம்
விருதுநகரில் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காலாவதியான டோல்கேட்டை உடனடியாக அகற்ற வேண்டும், காவல்துறையினரால் ஆன்லைன் மூலமாக அபராதம் விதிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், சரக்கு வாகனங்களுக்கு கூடுதல் வரிவிதிப்பதை முற்றிலும் நீக்க வேண்டும், இந்த லாரி தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்ககளின் வாழ்வாதாரம் இருக்கிறது. இதனை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு எங்களது தொழில் நசுக்கப்படாமல் இருக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Next Story