சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

ரயில்வே கேட்டில் சிக்கிய லாரி

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் லாரி மாட்டிக் கொண்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிகக்கப்ட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் -செய்யூர் பிரதான நெடுஞ்சாலையில் சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் லாரி மாட்டிக் கொண்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வழக்கம்போல ரயில் செல்வதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டது.. ரயில்வே பாதையை கடந்து செல்லும் பொழுது கனரக லாரி இரு தண்டவாளத்திற்கு இடையே மாட்டிக்கொண்டது.இதனால் லாரி எடுக்க முடியாத சூழ்நிலையால் உருவானது.

அடுத்த ரயில் பாதையில் எதிரே ரயில் இன்ஜின் மட்டும் வந்ததால் தாமதமாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.அதன் பின்னர் ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்து பொதுமக்கள் தண்டவாளத்துக்கு இடையே மாற்றிக் கொண்ட லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர்.அதன் பின்னர் போக்குவரத்து சரியானது. கடந்த 6 மாதங்களாகவே சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் லாரி கேட்டில் மோதி விடுவதால் ரயில்வே கேட் திறக்க முடியாத சூழ்நிலை,

சரியாக சிக்னல் கிடைக்காத காரணத்தினாலும் ரயில்வே கேட் திறக்க முடியாத நிலை,ரயில்வே கேட் இரண்டு இரும்பு கம்பிகளும் அறுந்து தூக்க முடியாத நிலையில் கயிறு கட்டி தூக்கக்கூடிய நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவ்வப்போது ரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டு மீண்டும் திறக்கும் போது பிரச்சனைகளுக்கு,

பின்னர் ரயில்வே கேட் திறந்து பொதுமக்கள் வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பல்வேறு நிலைகளில் திறக்க முடியாத நிலையால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story