லாரி டயர் வெடித்து விபத்து - 5 தொழிலாளிகள் காயம்

லாரி டயர் வெடித்து விபத்து - 5 தொழிலாளிகள் காயம்

விபத்துக்குள்ளான மினி லாரி 

மன்னார்குடி அருகே பேவர் பிளாக் கல் ஏற்றி வந்த மினி லாரியின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பெண் தொழிலாளிகள் காயமடைந்தனர்.
மன்னார்குடி தஞ்சாவூர் சாலையில் காரக்கோட்டை பகுதியில் தஞ்சையில் இருந்து பேவர் பிளாக் கல் ஏற்றி வந்த மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் லாரி நிலை தடுமாறி சாலை ஓரத்தில் லாரி சாய்ந்தது . இதில் லாரியில் இருந்த ஐந்து பெண் தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அனைவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story