அரூர் அருகே லாரிகள் மோதி விபத்து ஓட்டுநர்கள் லேசான காயம்

மஞ்சவாடி கணவாய் பகுதியில் லாரிகள் மோதி விபத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மஞ்சவாடி கணவாய் பகுதியில் இன்று காலை அரூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியும் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த விபத்தில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஓட்டுநர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இது குறித்து அருள் காவல் தொடர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story