வ.உ.சி. துறைமுகத்தில் லாரிகள் ஸ்ட்ரைக்
வேலை நிறுத்தம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஓட்டுனருக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகததில் ஓட்டுனர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சார்பில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் எதிரொலியாக டிரைவர்கள் பணிக்கு செல்லாததால் 500க்கும் மேற்பட்ட லாரிகள் துறைமுகம் கிரீன் கேட் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்தில் 4 கப்பல்கள் நிற்கிறது. டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கப்பலில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை ஜனநாயக தரைவழிப் போக்குவரத்து ஓட்டுனர் மற்றும் பொதுத்தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Next Story