அமைச்சர் உதயநிதியை சந்தித்த பழனி கோவில் அறங்காவலர்கள்

அமைச்சர் உதயநிதியை சந்தித்த பழனி கோவில் அறங்காவலர்கள்

பழனி பஞ்சாமிர்தத்தின் பேக்கிங் மாடலை மாற்றப் போவதாக அறங்காவலர் குழு கூறியநிலையில், உறுப்பினர் சுப்பிரமணியன் அமைச்சர் உதயநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.  

பழனி பஞ்சாமிர்தத்தின் பேக்கிங் மாடலை மாற்றப் போவதாக அறங்காவலர் குழு கூறியநிலையில், உறுப்பினர் சுப்பிரமணியன் அமைச்சர் உதயநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீகத் தலமாகவும் விளங்குவது பழனி கோயிலாகும். இந்த ஆண்டு தோறும் 10 லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தரமற்ற இருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தி அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தரமானது தான் பழனி கோயில் மூலம் தரமான பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது என உறுதி செய்தனர்.

இந்நிலையில் பழனி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பழநி பஞ்சாமிர்தத்தின் பேக்கிங் மாடலை மாற்றப் போவதாக அறிவித்தனர். இந்நிலையில்பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் அமைச்சர் உதயநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story