உடைந்த பீர் பாட்டிலை காட்டி பணம் பறிக்க முயற்சி
உடைந்த பீர் பாட்டிலை காட்டி பணம் பறிக்க முயற்சி
திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி பிரிவு அருகே நடந்து சென்றவரிடம் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து ரூ.500 பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது.
திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன்(25) என்பவர் மணிகண்டனிடம் தான் பெரிய ரவுடி என்றும் தன்மீது காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன என்று கூறி உடைந்த பீர் பாட்டிலை காட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து ரூ.500 பணம் பறிக்க முயன்றதாக புதன்கிழமை மதியம் 1 மணி அளவில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேஷ் கண்ணனை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story