நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி!
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி - நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு.
கோவை: இரத்தினபுரி பகுதியை சேர்ந்த கலா(40) தையல் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று காந்திபுரம் 5வது வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் கலாவின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார்.கலா தன் கழுத்தில் இருந்த நகையை கெட்டியாக பிடித்து கொண்ட நிலையில் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார். இதுகுறித்து கலா இரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரதீப்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story