பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம்

பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம்

பைல் படம்

செல்லூர் பகுதியில் பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்; அப்போது பேசிய அவர்: நமது கூட்டணிக்கு 10 ஆண்டுகள் நல்லாட்சி தந்து 3ஆவது முறையாக மோடி அவர்தான் பிரதமர் என கம்பீராமாக உள்ளோம்.

ஆனால் திமுக மற்றும் ஈபிஎஸ் கம்பெனியும் யாருக்கு வாக்கு கேட்கிறார்கள், யார் பிரதமர் வேட்பாளர் என்பதே தெரியாமல் வாக்குசேகரித்து வருகின்றனர். மதுரையின் வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காவும் மதுரை தொகுதி மக்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

ஸ்ரீனிவாசன் மூலம் மத்திய அரசிடம் நேரடியாக நமது ஊரின் தேவைகளை கேட்டுப்பெறலாம் இப்போது இந்தியாவை ஆளும் கட்சியாகவும், நாளை தேர்தல் முடிந்து மீண்டும் ஆளப்போகின்ற கட்சியாகவும் இருக்கும் பாஜக கட்சியின் வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் போதை மருந்து மூலை முடுக்கெல்லாம் செல்வதை தடுக்க 20246ல் நல்லாட்சி அமைந்திட தாமரை சின்னத்திற்கு இளைஞர்களும், முதியவர்களும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story