டிடிவி தினகரன் முழு அரசியல்வாதி அல்ல. -ராஜன் செல்லப்பா பேட்டி

டிடிவி தினகரன் முழு அரசியல்வாதி அல்ல. -ராஜன் செல்லப்பா பேட்டி

டிடிவி தினகரன் அம்மாவிற்கு உதவியாக உற்ற துணையாக இருந்தவரே தவிர முழு அரசியல்வாதி அல்ல என ராஜன் செல்லப்பா பேட்டி அளித்தார்.


டிடிவி தினகரன் அம்மாவிற்கு உதவியாக உற்ற துணையாக இருந்தவரே தவிர முழு அரசியல்வாதி அல்ல என ராஜன் செல்லப்பா பேட்டி அளித்தார்.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றத்திற்கு பிஜேபி காரணம். டிடிவி தினகரன் அம்மாவிற்கு உதவியாக உற்ற துணையாக இருந்தவரே தவிர முழு அரசியல்வாதி அல்ல. -ராஜன் செல்லப்பா பேட்டி எய்ம் இல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க முடியாது தற்போது ஆரம்பித்தார்களா அல்லது வருத்தப்படுவதா என்று எனக்கு தெரியவில்லை. -விஜய பிரபாகர் பேட்டி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று இரண்டாம் கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம், பெரிய ஆலங்குளம், பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முரசு சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த MLA ராஜன் செல்லப்பா பேசுகையில்:
பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அறிவித்ததாக தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அதிமுக பதில் அளிப்பதற்கும், பல்வேறு கட்ட தேர்தல் குறித்து வரைமுறை செய்ய கால வாசம் கேட்டிருந்தது உடனடியாக நிறைவேற்ற வேண்டிய சட்டம் இல்ல அதற்கான வாய்ப்பு இல்லை போகாத ஊருக்கு வழி சொல்லுகிறது மத்திய அரசு. பிஜேபியின் தேர்தல் அறிக்கை ஒவாத ஒன்று சி ஏ ஏ சட்டத்தில் நடைமுறைப்படுத்த முடியாத சூழலில் உள்ளது.
அண்ணாமலையின் வயது அவர் அதிமுகவை அழித்து விடுவேன் என அண்ணாமலை கூறுவது அந்த அளவிற்கு அதிமுக உள்ளதா என்ற கேள்விக்கு:
அரசியல் அநாகரிக்கத்திற்கு உதாரணம் அண்ணாமலை. அதிமுகவை அழித்து விடுவேன் என்று சொன்னது மட்டுமல்ல அதிமுகவை பிடுங்கி இன்னொருவரிடம் கொடுக்கும் சகுனி வேலையை அண்ணாமலை செய்கிறார் நல்ல கூட்டலில் இருந்து வெளிவந்தோம் என சில நண்பர்கள் வருத்தப்பட்டார்கள் ஆனால் இன்றைக்கு கூட்டணியில் இருந்து விலகியது நல்ல முடிவு என தெரிய வந்திருக்கிறது. அதிமுகவை உள்ளிருந்தே அளிக்க வேண்டும் என பிஜேபியும், அண்ணாமலையும் இருந்தது மக்கள் உணர்ந்துள்ளனர். துரோகி என்பதைவிட வேறு வழியில்லாமல் பிஜேபியுடன் ஓபிஎஸ் டிடிவி கூட்டணி வைத்து இருக்கிறார்கள் இருவருமே அதிமுகவை அடகு வைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் ஆனால் பிஜேபி இவர்களை முழுங்க பார்க்கிறது. இந்த இருவரின் வரலாறு முடிந்து போய்விட்டது. ஓபிஎஸ் 2001 இல் இருந்து தான் மக்களிடத்தில் அறிமுகமானவர். அதேபோல் டிடிவி தினகரன் அம்மாவிற்கு உதவியாக உற்ற துணையாக இருந்தவரை தவிர முழு அரசியல்வாதி அல்ல இவர்கள் அதிமுகவை அடகு வைத்து அடிமையாக்க பார்க்கிறார்கள் ஆனால் எடப்பாடியோ அதிமுக என்ற சாம்ராஜ்யத்தை கட்டி காக்கிறார். கூட்டணி என்பதால் சில விஷயங்களை சொல்லாமல் இருந்தோம்., ஏன் தோற்றம் என்று ஆராயும் போது பிஜேபி ஒரு காரணம் அதை யாரும் மறுக்க முடியாது 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றத்திற்கு பிஜேபி காரணம். அதுவும் ஒரு காரணம் மறுப்பதற்கு இல்லை பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதால் தமிழக மக்களின் உரிமைகளை பெற முடியாது என்பதால் தமிழக பிரச்சினைகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜகவை இருந்து வெளியே வந்து நல்ல கூட்டணியை வைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து வேட்பாளர் விஜய பிரபாகரனை கேட்டபோது:
பிஜேபி என்ன தேர்தல் அறிக்கை கொடுத்தாலும் தமிழகத்தில் எந்த தாக்கத்திலும் ஏற்படுத்தாது தமிழகத்தில் பிஜேபியை மக்கள் ஆதரிக்கவில்லை பிஜேபியின் வாக்குறுதிகள் பொய் வாக்குறுதி என்று தான் நினைக்க வேண்டி உள்ளது. தமிழகத்தில் அதிமுக திமுக தேமுதிக என்ற மிகப்பெரிய கட்சிகள் உள்ளது தமிழகத்தில் பிஜேபி கால் ஊன்டுவது கஷ்டம் தான். பிஜேபி தலைவர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த பின்னடைவும் இல்லை பெருநகரங்களில் வேண்டுமானால் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கலாமே தவிர விருதுநகர் தொகுதியைப் பொறுத்தவரை சிவகாசி அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. கடந்த தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக கடந்த தேர்தலில் 33 மாதத்தில் காளவாசல் கேட்டிருந்தார்கள் தற்போது இந்த தேர்தலில் 33 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள் 66 மாதங்கள் வீணாகிவிட்டது எய்ம் இல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க முடியாது தற்போது ஆரம்பித்தார்களா அல்லது வருத்தப்படுவதா என்று எனக்கு தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் அதிமுக சார்பில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குரல் கொடுப்போம் எங்களுக்கு கொடுக்கின்ற வரவேற்பை நீங்கள் பார்க்கும் போது எப்படி எண்ணுகிறீர்கள், விஜய் பிரபாகரன் வெற்றி பெறுவாரா என்று சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியதற்கு ஜூன் நான்கு பார்ப்போம் என்று செய்தியாளர்கள் தங்களுடைய பதிலை தெரிவித்தனர். தமிழகத்தில் அதிமுக திமுக தேமுதிக என்ற மிகப்பெரிய கட்சிகள் உள்ளது தமிழகத்தில் பிஜேபி கால் ஊன்டுவது கஷ்டம் தான். பிஜேபி தலைவர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த பின்னடைவும் இல்லை பெருநகரங்களில் வேண்டுமானால் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கலாமே தவிர விருதுநகர் தொகுதியைப் பொறுத்தவரை சாத்து சிவகாசி அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. கடந்த தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக கடந்த தேர்தலில் 33 மாதத்தில் காளவாசல் கேட்டிருந்தார்கள் தற்போது இந்த தேர்தலில் 33 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள் 66 மாதங்கள் வீணாகிவிட்டது. எய்ம் இல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க முடியாது தற்போது ஆரம்பித்தார்களா அல்லது வருத்தப்படுவதா என்று எனக்கு தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Tags

Next Story