சங்கரன்கோவிலில் ஜான் பாண்டியனை ஆதரித்து டி.டி.வி. தினகரன் பிரசாரம்

சங்கரன்கோவிலில் ஜான் பாண்டியனை ஆதரித்து டி.டி.வி. தினகரன் பிரசாரம்

டி.டி.வி. தினகரன் பிரசாரம்

சங்கரன்கோவிலில் ஜான் பாண்டியனை ஆதரித்து டி.டி.வி. தினகரன் பிரசாரம்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் தமமுக நிறுவனா்-தலைவா் ஜான் பாண்டியனை ஆதரித்து, அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் கடையநல்லூரில் நேற்று இரவு பிரசாரம் செய்தாா். மணிக்கூண்டு ஜான் பாண்டியனுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஃபாா்வா்டு பிளாக் ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து தோ்தலை சந்திக்கிறோம். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவது உறுதி. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பது பாஜக மட்டுமே.தொகுதி வளா்ச்சிக்கும் ,தமிழகத்தின் வளா்ச்சிக்கும் பாஜகவிற்கு நீங்கள் வழங்கும் வாக்குகள் தான் உதவியாக அமையும். வெளிநாடுகளில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பாஜக அரசின் நடவடிக்கைகளே காரணம் என்றாா் . இதில், வேட்பாளா் ஜான்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாங்கு ஒலிக்கு மரியாதை: டி.டி.வி. தினகரன் பேசியபோது, அருகிலிருந்த பள்ளிவாசலில் இருந்து இரண்டு முறை பாங்கு ஒலிக்கப்பட்டது. அதற்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவா் பேச்சை நிறுத்தி, பின்னா் தொடா்ந்தாா். மேலும், அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்தபோது, கூடியிருந்த தொண்டா்கள் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story