ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன் - தங்கதமிழ்ச்செல்வன்

ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன் - தங்கதமிழ்ச்செல்வன்

 தங்க தமிழ்ச்செல்வன் 

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அதிமுகவினரை தன் பக்கம் இழுத்து தான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்கான முடிவெடுத்தது குறித்த தகவல் உளவுத்துறை மூலம் தெரிந்ததால் தான் ஜெயலலிதவால் நீக்கப்பட்டு 15 ஆண்டு வனவாசம் போனார் டிடிவி தினகரன் இதுவே நிதர்சனமான உண்மை என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர், வடுகபட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச் செல்வன்.,தினகரன் 14 ஆண்டுகள் விலகி இருந்ததற்கும், அவரை அம்மா நீக்கியதற்குமான வெளிப்படையான காரணம்., அண்ணன் பன்னீர் செல்வம் இதற்கான காரணத்தை பொது மேடையில் பேசினார்., அம்மா உயிரோடு இருக்கும் போது அதிமுகவினரை தன் பக்கம் இழுத்து முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக முடிவெடுத்ததன் காரணமாக உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் காரணமாக தான் இவரை கட்சியை விட்டு நீக்கி 15 வருடம் வனவாசம் போக வைத்தார்., இவர் நல்லதுக்கு வனவாசம் போகவில்லை தூரோகம் பண்ணியதால் , அம்மாவிற்கு துரோகம் செய்ததால் சசிக்கலாவையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்கி வைத்திருந்தார்கள் இது தான் எதார்த்தமான உண்மை.

ஆர்.பி.உதயக்குமார் தங்கதமிழ்ச் செல்வனை, தகர தமிழ்ச்செல்வன் என மாறிவிட்டார் என விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு., தங்கம் எப்போது தகரமாக மாறியது., தங்கம் தங்கமாக தான் உள்ளது., உதயசூரியனுக்கு போன பின்னர் தான் மினு மினுக்கிறது, ஜோலிக்கிற தங்கமாக இருக்கிறது., தமிழ்நாடு முதல்வர் அன்பையும் பாசத்தையும், பொறுப்பையும் கொடுத்திருக்கார்., எம்.பி ஆக நிற்க வாய்ப்பு கொடுத்து வெற்றி பெருவதற்கான சூழலையும் உருவாக்கி கொடுத்திருக்கிறார். தங்கம் ஜொலிக்கத் தான் செய்யும்., ஒரு எம்.பி வேட்பாளர், பிரதமர் வேட்பாளர் போல தனி தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் டிடிவி தினகரன். என்ன நினைத்து பேசுகிறார் என புரியவில்லை., எப்படி சாத்தியமாகும் அனைத்தும்., மதுரையில் விமான நிலையம் வைத்துக் கொண்டு 30 கிலோ மீட்டரில் இன்னொரு விமான நிலையம் கொடுப்பார்களா எப்படி சாத்தியமாகும்.

செல்வாக்கு படைத்த எம்.பி.யாக இருந்த போதே திண்டுக்கல் சபரி மலைக்கு இரயில் பாதை கொண்டு வந்திருக்கலாம்ல ஏன் கொண்டு வரவில்லை., நான் சொல்கிறேன் திண்டுக்கல் சபரி மலை இரயில்பாதை வரும், முல்லை பெரியாறில் பேபி அணையை பலப்படுத்தி தண்ணீரை தேக்குவோம்., உசிலம்பட்டி, தேனி, போடியில் புறவழிச்சாலை, 58 கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வர ஏற்பாடு செய்வோம்., இது முதல்வரின் அறிக்கை தனிப்பட்ட நபர் தேர்தல் அறிக்கை கொடுக்க முடியாது., சாத்திய கூறுகள் உள்ளது என சொல்வது எப்படி சாத்தியம் ஆகும் திருச்சியில் ஒரு விமான நிலையம், மதுரையில் விமான நிலையம், தேனியில் ஒரு விமான நிலையம் என்றால் வாய்ப்பே இல்லை என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

Tags

Next Story