அமமுக கிரிக்கெட் போட்டியில் டிடிவி ராக்கிங் பாய்ஸ் அணி வெற்றி

அமமுக கிரிக்கெட் போட்டியில் டிடிவி ராக்கிங் பாய்ஸ் அணி வெற்றி

கிரிக்கெட் போட்டி 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா வரும் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது.. இதை முன்னிட்டு அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் ஏற்பாட்டில், கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியை தலைமை நிலைய செயலாளரும், மண்டல பொறுப்பாளரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான் ராஜசேகரன் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஐந்து அணிகள் பங்கேற்றன. தகுதி சுற்று முறையில் நடந்த இந்த போட்டியின், இறுதியில், TTV Rocking Boys அணியும், TTV Kings அணியும் மோதின. இறுதியில், TTV ரோலிங் டிராபியை, ஜெயலலிதா பேரவை செயலாளர் பெஸ்ட் பாபு தலைமையிலான TTV rocking boys வென்றனர். இப்போட்டியில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், சார்புஅணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற அணிக்கு வரும் 13ஆம் தேதி சுழற் கோப்பை வழங்கப்படுகிறது

Tags

Next Story