கே.எஸ்.ராஜா கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே.எஸ்.ராஜா கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே.எஸ்.ராஜா கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செல்லப்பிராட்டியில் உள்ள கே.எஸ்.ராஜா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலா ளர் பாக்யஸ்ரீ தலைமை தாங்கினார். முதல்வர் சுசீந்திரன், இயக்கு னர் லோகஸ்ரீ, நிர்வாக இயக்குனர் நித்யஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் கோமதி வரவேற்றார். இதில் மேல் சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பத்மசா, திருஞா னம் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் கலந்து கொண்டு காச நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் காசநோய் குறித்து வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் துறை தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story