காசநோய் கண்டறியும் கருவி வழங்கிய ரோட்டரி சங்கம்

காசநோய் கண்டறியும் கருவி வழங்கிய  ரோட்டரி சங்கம்

காசநோய் கண்டறியும் கருவி வழங்கிய ரோட்டரி சங்கம்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.27.40 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டறியும் கருவி வழங்கியது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேசில் நாட்டின் சியாநார்ட் ஃப்ர்குய்ம் காஸ்ட்ரோ - 4630 ரோட்டரி சங்கம், ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சர்வதேச நிதி திட்டத்தின் கீழ் ரூ.27.40 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டறியும் கருவி, நுண்ணோக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பயன்பாட்டினை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தொடங்கி வைத்தார். தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு 2025-க்குள் காசநோய் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராசிபுரம் ரோட்டரி சங்கத்தினர், ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.27,40,119/- மதிப்பில் காசநோய் பாதிப்பினை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளித்திட பிஎம்டிபிஎம்பிஎ – நிக்சய் மித்ரா (PMTBMBA-Nikshay Mitra (TB நண்பன்)) CBNAAT - 1 கருவி மற்றும் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுண்ணோக்கி கருவிகளை வழங்கினர். இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, உபகரணங்களின் பயன்பாட்டினை தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் காசநோய் பாதிக்கப்பட்ட 90 சதவிகித நபர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள கருவிகள் மூலம் 100 சதவிகித நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்றார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் எஸ்.ராகவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ஏ.ராஜ்மோகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் கே.பூங்கொடி, துணை இயக்குனர் (காசநோய்) ஆர்.வாசுதேவன், ரோட்டரி முன்னாள் ஆளுநர்கள் பி.சரவணன், ஆளுநர் தேர்வு சிவசுந்தரம், செந்தில்குமார், மண்டல உதவி ஆளுநர் ஏ.ராஜூ, மாவட்ட நிதித்திட்டச் சேர்மேன் பாபுகந்தசாமி, பவுன்டேசன் சேர்மேன் எஸ்.லோகநாதன்,திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், திட்டச் சேர்மேன் என்.பி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காசநோய் கருவியினை மாவட்ட சுகாதாரப்பணிகள் இயக்குனர் ஏ.ராஜ்மோகனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கலைச்செல்வி, நாமகிரிபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தயாசங்கர், ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் ஏ.திருமூர்த்தி (ஏ)ரவி, எஸ்.சத்தியமூர்த்தி, கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், பி.ஆர்.செளந்தரராஜன், கே.கந்தசாமி, ஆர்.அனந்தகுமார், இ.ஆர்.சுரேந்திரன், முருகானந்தம், கதிரேசன், எல்.சிவக்குமார், மஸ்தான், மணிமாறன், இன்னர் வீல் சங்கத் தலைவர் சரோஜாகுமார், தெய்வானை ராமசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story