மயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ விநாயகர் கொடியேற்றுவிழா

மயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ விநாயகர் கொடியேற்றுவிழா

விநாயகர் கொடியேற்றம்

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனக் கட்டுப்பாட்டில், அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படுவது வாடிக்கை. கங்கை முதலான புண்ணிய நதிகள், தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள, மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடியதாக புராணம் கூறுகிறது. காவரி துலாக்கட்டத்தில், புனிதநீராடினால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும், என்பது நம்பிகை. ஐப்பசி 30 நாளும், மாயூரநாதர் ஆலயத்திலிருந்து சுவாமி புறப்பாடாகி, காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். மயூரநாதர் ஆலயத்தில், 10 நாள் திருவிழா நடைபெறும். வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ஆம் நாள் கடைமுக தீர்த்தவாரி நடைபெறும். 10நாள் விழாவிற்கான விநாயகர் கொடியேற்றம் மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.



Tags

Next Story