மஞ்சள் ஏலம் !!

மஞ்சள் ஏலம் !!

மஞ்சள் ஏலம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர்,தலைவாசல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 145 விவசாயிகள் 742 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 14 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 16,169 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 19,709 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 15,369 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 17, 299 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 21,659 அதி பட்சமாக 25, 289 ரூபாய் விலை போனது.

742 மஞ்சள் மூட்டைகள், மொத்த குவிண்டால் 427.94 மூலம் 71 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மஞ்சள் வரத்து குறைந்ததாகவும்,வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதிலும் விலையில் மாற்றம் இல்லாததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags

Next Story