அரூரில் 11 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

அரூரில் 11 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

மஞ்சள் ஏலம்

தர்மபுரி வேளாண்மை விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 11 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி வேளாண்மை விற்பனை குழுவின் கீழ் அருள் கச்சேரி மெட்டில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலும் ஏரளமான விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்திருந்தனர். 150 மூட்டை மஞ்சள் விற்பனைக்காக கொண்டு வந்த நிலையில் விராலி ரகம் குவிண்டால் 14,169 ரூபாய் முதல்18,910 ரூபாய் வரையிலும், குண்டு மஞ்சள் 14,299 ரூபாய் முதல் 16,699 ரூபாய் வரையில் விற்பனையானது.மேலும் 150 மூட்டை மஞ்சள் 11 லட்சத்திற்கு விற்பனையானதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story