மஞ்சளுக்கு ரூ.14011 வரை விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

மஞ்சளுக்கு ரூ.14011 வரை விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மஞ்சளுக்கு ரூ.14011 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மஞ்சளுக்கு ரூ.14011 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் விளை விக்கக் கூடிய மஞ்சளுக்கு உலக அளவில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. ஈரோடு மஞ்சளில் குர்குமின் தன்மை அதிகமாக உள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது .ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடும் வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மஞ்சள் விலை விளைவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 ஒழுங்குமுறை மஞ்சள் விற்பனை கூடங்கள் மற்றும் தனியார் மஞ்சள் வளாகம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு ஒழங்கு முறை விற்பனைக்கூடத்தில் 2862 மஞ்சள் மூட்டைபள் விற்பனைக்கு வந்த நிலையில் 1127 மூட்டைகள் விற்பனையாகின. விரலி மஞ்சள் 8299 ரூபாய் முதல் 14011 ரூபாய் வரையிலும் , கிழங்கு 7433 ரூபாய் முதல் 12311 ரூபாய் வரையிலும் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story