மஞ்சள் விலை உயர்வு
King 24x7 Atricle (TAM) |28 Jun 2024 4:20 PM GMT
ஒழுங்குமுறை கூடத்தில் மஞ்சளுக்கு 17042 ரூபாய் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கக் கூடிய மஞ்சளுக்கு உலக அளவில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. ஈரோடு மஞ்சளில் குர்குமின் தன்மை அதிகமாக உள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடும் வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மஞ்சள் விலை விளைவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 ஒழுங்குமுறை மஞ்சள் விற்பனை கூடங்கள் மற்றும் தனியார் மஞ்சள் வளாகம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு ஒழங்கு முறை விற்பனைக்கூடத்தில் 2454 மஞ்சள் முட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில் 904 விற்பனையாகின. விரலி மஞ்சள் 12809 ரூபாய் முதல் 17042 ரூபாய் வரையிலும் கிழங்கு 11569 ரூபாய் முதல் 15576 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Tags
Next Story