ஆத்தூரில் மஞ்சள் ரூ.3.50 கோடிக்கு வர்த்தகம்

ஆத்தூரில் மஞ்சள் ரூ.3.50 கோடிக்கு வர்த்தகம்
மஞ்சள் ஏலம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ரூ3.50 கோடிக்கு ஏலம் போனது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 649 விவசாயிகள் 3,489மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 14 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர்.

இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 16,569 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 20,633 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 14,869ரூபாய்க்கும் அதிகபட்சமாக 17,772 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 22,469 அதி பட்சமாக 28,779 ரூபாய் விலை போனது. 3,489 மஞ்சள் மூட்டைகள் மூலம் 3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story