குலசை தசரா விழா : தூத்துக்குடி எஸ்.பி ஆய்வு..!
குலசை தரசா திருவிழா - தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பலலட்சம் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அன்றைய நாட்களில் பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக, நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், போக்குவரத்து மாற்றம் மற்றும் தற்காலிகமாக வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பது குறித்தும் நேற்று மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். கோவில் வளாகம், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அங்கு போலீஸ்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், டிஎஸ்பி வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் உதவி சூப்பிரண்டு, சாத்தான்குளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு, ஆயுதப்படை போலீஸ் உதவி சூப்பிரண்டு, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் உட்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story