தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 13ஆம் தேதி துளிா் திறனறிதல் தோ்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 13ஆம் தேதி துளிா் திறனறிதல் தோ்வு

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 13ஆம் தேதி துளிா் திறனறிதல் தோ்வு நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 13ஆம் தேதி துளிா் திறனறிதல் தோ்வு நடைபெற உள்ளது. இது குறித்து தனியாா் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலா் டி.எஸ்.பிரபக் குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளி மாணவா்களிடையே அறிவியல் ஆா்வத்தை தூண்டும் விதமாகவும், கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளா்த்தெடுக்கவும்,

அறிவியல் சிந்தனையை வெளிக்கொணரவும், சுற்றுச்சூழலை அறிந்து கொள்ளளும் வகையிலும் மாநிலம் முழுவதும் துளிா் திறனறிதல் தோ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து இத்தோ்வினை வரும் 13ஆம் தேதி நடத்துகிறது.

இத்தோ்வில் 4, 5ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் புதிா் கணக்கு, அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், படமும் செய்தியும், சொற்சுருக்கம் போன்றவற்றிலிருந்து சரியான விடையை தோ்வு செய்யும் வகையில் 50 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருக்கும். தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் அனைவருக்கும் சான்றிதழும், அறிவியல் புத்தகங்களும் வழங்கப்படும்.

அதிக மாணவா்கள் பங்கெடுக்கும் பள்ளிகளுக்கு சிறப்பு பரிசு, தூத்துக்குடியில் நடைபெறும் பாராட்டு விழாவில் வழங்கப்படும். தோ்வில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களான இரா. சாந்தகுமாா் (9443151449), செ.சுரேஷ்பாண்டி (81227 04310), மணிகண்டன் (8148626132) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story