தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்கம்
தேர்வில் பங்கேற்ற மாணவர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. மொத்தம் 19 ஆயிரத்து 132 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் 19ஆயிரத்து 132 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க 150 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 1256 தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் மாணவர்கள் செல்போன் மற்றும் துண்டு சீட்டு கைக்குட்டை உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். தேர்வை எவ்வித பிரச்சனையும் இன்றி பாதுகாப்பாக நடத்தி முடிக்கும் வகையில்,

மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின் பேரில் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு துவங்கியதை ஒட்டி காலையில் கோயில்களில் அதிகமான பள்ளி மாணவர்கள் சுவாமி தரிசனம் செய்தும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

இதே போல் கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளிலும் வழிபாடு நடத்தி மாணவ, மாணவிகள் தேர்வு எழுத சென்றனர். பள்ளிகளில் தேர்வுக்கு முன்பாக மாணவ, மாணவிகள் பிரார்த்தனை செய்தனர்.

Tags

Next Story