பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மாயம் - அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்
வீட்டில் 8 சவரன் நகை கொள்ளை
நகை கொள்ளை குறித்து போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் வீட்டில் வைத்திருந்த 8 நகை கொள்ளையடிப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி கந்தசாமிபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் இசக்கியப்பன் (32). இவர் கடந்த 16ம் தேதி பீரோவில் 8 சவரன் நகையை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் பீரோவை பார்த்தபோது அந்த நகையை காணவில்லை என கூறப்படுகிறது. இது வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதனடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிவு செய்த நகை கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story