வீர கதைகள் திட்டத்தில் தூத்துக்குடி மாணவியின் கவிதை தேர்வு

வீர கதைகள் திட்டத்தில் தூத்துக்குடி மாணவியின் கவிதை தேர்வு

டிவைனா 

தேசிய அளவில் சிறந்த 100 படைப்புகளில் தூத்துக்குடி பள்ளி மாணவியின் கவிதை தேர்வாகி உள்ளது. 

வீர தீர விருதுகள் பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் தீரத்தையும் உலகறியச் செய்ய வீர கதை என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள 2.43 லட்சம் பள்ளிகளில் இருந்து 1.37 கோடி மாணவர்கள் பங்கு பெற்றனர். அதிலிருந்து 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபாய் 10000 ரொக்கப் பரிசம் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை நேரில் கண்டு களிக்கும் வகையில் பெற்றோருடன் விமானம் மூலம் டெல்லி சென்று வரவும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதில், தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி டி.டிவைனா கவிதை பிரிவில் தேசிய அளவில் சிறந்த 100 படைப்புகளில் தேர்வாகியுள்ளார். மேலும் இவர் கவிதை பிரிவில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே மாணவி என்ற பெருமையையும் பெறுகிறார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் சுகுமார், பள்ளி, நிர்வாகி ஜான் ஜோசப் கென்னடி, பள்ளி முதல்வர் பால்கனி, பள்ளி துணை முதல்வர் ஜென் மேத்யூ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags

Next Story