தூத்துக்குடி : பணியை துவங்கிய பறக்கும் படை

தூத்துக்குடி :  பணியை துவங்கிய பறக்கும் படை

பறக்கும் படை வாகனங்கள் 

தூத்துக்குடியில் பறக்கும் படை அலுவலர்கள் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை அலுவலர்கள் அடங்கிய வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

பறக்கும் படை வாகனங்கள் விபரம்: வாகனங்கள் எண்ணிக்கை - 18. அலுவலர்களின் எண்ணிக்கை -4. ஒளிப்பதிவாளர் - 1. 1 வாகனத்திற்கு 5 நபர்கள். GPS கருவி அனைத்து வாகனத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. 3 சுற்றுகளாக இப்பறக்கும் படையினர் பணிபுரிவர். மொத்த பறக்கும் படை குழுக்கள் -54. 1 சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்..

Tags

Next Story