வ.உ.சி கல்லுரியில் இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்ட முகாம்

வ.உ.சி கல்லுரியில் இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்ட முகாம்
மாணவர்களுக்கு பரிசு
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லுரியில் இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்ட முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லுரி, மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும் இணைந்து இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்டமுகாமை ஏப்ரல் 29 ம் தேதி முதல் மே 13 ம் தேதி வரை 15 நாட்கள் வ.உ.சிதம்பரம் கல்லுரியில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் லெ. மீனாட்சி சுந்தரம் வரவேற்று தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர் ரெஜினி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிறப்புரை வழங்கினார். கல்லுரி முதல்வர் சொ. வீரபாகு வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சி வகுப்பில் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கும் 80 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அதிகாலையில் யோகா வகுப்புகளும், முற்பகலில் அறிவியல் பாட வகுப்புகளும், பிற்பகலில் அறிவியல் சோதனை மற்றும் செய்முறை வகுப்புகளும் நடத்தப்பட்டது.

பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள மாணவ மாணவிகள் சிறப்பாக தங்களுடைய பங்களிப்பை தந்து அவர்களின் அறிவுத் திறமையால் உருவாக்கிய மாதிரிகள் அனைத்தும் காட்சிபடுதப்பட்டு அதில் சிறப்பாக மாதிரிகளை உருவாக்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வ.உ.சிதம்பரம் கல்லுரி முதல்வர் சொ. வீரபாகு துவக்கவுரையாற்றினார். மீன்வள கல்லுரி முதல்வர் பா. அகிலன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் லெ. மீனாட்சி சுந்தரம் நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story