பனை ஓலைகள் மூலம் வாழ்த்து அட்டை செய்யும் பயிற்சி

பனை ஓலைகள் மூலம் வாழ்த்து அட்டை செய்யும் பயிற்சி

 பனை ஓலை வாழ்த்து அட்டை 

திருமறையூர் மறு ரூப ஆலயத்தில் பனை ஓலைக ளைக் கொண்டு வாழ்த்து அட்டை செய்யும் பயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலைகளைக் கொண்டு வாழ்த்து அட்டை செய்யும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை மும்பை மெதடிஸ்ட் சபையின் போதகரும் தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினருமாகிய போதகர் காட்சன் சாமுவேல் வழங்கினார். இப்பயிற்சியில் நாசரேத் சுற்று வட்டாரத்தில் இருந்து மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

பனை ஓலைகளைக் கொண்டு வாழ்த்து அட்டை தயாரித்தல், படங்கள் தயாரித்தல் போன்றபயிற்சிகள் வழங்கப்பட்டது. பனையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறவும், விடுமுறை நாட்களை மாணவ மாணவிகள் பயனுள்ள முறையில் செலவிடவும் இப்பயிற்சி மிக உறுதுணையாக அமைந்தது.

இதற்கானஏற்பாடுகளை தென்னிந்திய திருச்சபை சினாடு மாமன்றத்தின் சுற்றுச் சூழல் கரிசனை துறையின் இணை இயக்குனரும், திருமறையூர் சேகர தலைவருமான ஜான் சாமுவேல் செய்திருந்தார்.

Tags

Next Story