இரட்டை ரயில் பாதைகள் இணைப்பு பணி: ரயில் சேவை ரத்து
தூத்துக்குடி ரயில் நிலையம்
திருநெல்வேலி - மேலப்பாளையம் இரட்டை ரயில் பாதைகள் இணைப்பு பணிகள் காரணமாக மணியாச்சி - தூத்துக்குடி ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதைகள் இணைப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் வண்டி எண் 06679 வாஞ்சி மணியாச்சியில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட வேண்டிய வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் 11.02.24 ம் தேதி முதல் 20.11.24 ம் தேதி வரையும், ரயில் வண்டி எண் 06847 தூத்துக்குடியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் 11.02.24 ம் தேதி முதல் 20.11.24 ம் தேதி வரையும், ரயில் எண் 06848 வாஞ்சி மணியாச்சியில் இருந்து அதிகாலை 03.10 மணிக்கு புறப்பட வேண்டிய வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் 12.02.24 ம் தேதி முதல் 21.11.24 ம் தேதி வரையும், ரத்து செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story