இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு

இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு
நடப்பாண்டில் சுகப்பிரசவம், இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரித்து உள்ளது
நடப்பாண்டில் சுகப்பிரசவம், இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரித்துள்ளது

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு தினமும் பரிசோதனை, சிகிச்சை, பிரசவம், பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவாகும் என்பதால் பிரசவதற்திற்காக அரசு மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 561 சுகப்பிரசவங்கள், 16 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 615 சுகப்பிரசவங்கள், 22 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஒப்பிடுகையில் கடந்த 4 மாதங்களில் 54 சுகப்பிரசவங்கள், 6 இரட்டை குழந்தைகள் அதிகரித்துள்ளது.

Tags

Next Story