10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் யுவராஜ், கலைவாணி தம்பதியினரின் இரட்டையர்கள் அக்ஷயா, அகல்யா. ரமேஷ் யுவராஜ் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கலைவாணி ராசிபுரம் தனியார் பள்ளி வித்யா மந்திர் ஆசிரியராக உள்ளார். ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர்.
தற்போது தேர்வு முடிவுகள் வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் வெற்றி பெற்ற இருவரும் 500.க்கு 463 என ஒரே மாதிரி மதிப்பெண்களை பெற்று தேர்வாகினர். இரட்டையர்கள் ஒரே பள்ளியில் படித்து ஒரே மதிப்பெண்கள் பெற்ற சம்பவம் பெற்றோர் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இவர்களை பள்ளி நிர்வாகிகள் சால்வை அணிவித்து இனிப்புகள், பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து பள்ளியின் தலைவர் Er. N. மாணிக்கம், செயலர் V. சுந்தரராஜன் உட்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.