நகை திருட்டில் திருப்பம் -அடகு வைத்து விட்டு திருடியதாக புகார்
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே விராலிகாட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது (56). இவர் அரசு இஸ்ஐ மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் என கூறப்படுகிறது இவர் கடந்த 9-ம் தேதி குடும்பத்துடன் கோயம்பதூருக்கு சென்றிருந்தார். 13-ம் தேதி இரவு வீட்டிற்க்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் நகைகள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டதாக திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். போலிசார் விசாரனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சிசிடிவி கேமிரா பதிவு அடிப்படையில் நேற்று டேவிட் ராஜ் (28), அனிஷ் (31) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வீட்டை உடைத்து உள்ளே கொள்ளை முயற்சி நடந்த நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் வீட்டில் இருந்து எதுவுமே திருடவில்லை என்று அவர்கள் போலீசாரிடம் கூறினார்கள். உடனடியாக போலீசார் புகார் அளித்த ராஜகுமாரை அழைத்து தொடர்ந்து விசாரணை செய்தனர். அப்போது அவர் தான் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவை உடைத்து திருடர்கள் புகுந்து இருந்ததால், நகைகளை ரூபாய் 5 லட்சத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் போலீசார் கைதான இருவரையும் சிறையில் அடைத்தனர். திருட்டுப் போனதாக புகார் தெரிவித்த ராஜ்குமார் எதற்காக உண்மைக்கு புறம்பான தகவல் தெரிவித்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.