இரு மாற்று கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு வாபஸ்..!
வேட்பு மனு வாபஸ்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி செய்யப்பட்ட 13 வேட்பாளர்களில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி செய்யப்பட்ட 13 வேட்பாளர்களில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் 11 வேட்பாளர்கள் தற்போது இறுதிச் செய்யப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கி, 27 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இறுதியாக 13 வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் , சுயேச்சை வேட்பாளர்களான மோகனசுந்தரம் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார் , இதேபோல் கார்த்திகேயன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் முதன்மை வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இந்த இருவர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக அளித்த கடிதத்தினை ஏற்று வேட்புமனு வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் செல்வம் , அதிமுக சார்பில் ராஜசேகர் , பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் மற்றும் நாம் தமிழர் சார்பில் சந்தோஷ் குமார் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இளையராஜா என ஐந்து கட்சிகளும் , ரமேஷ் , இளங்கோவன், சூர்யா, செல்வம் , நரேஷ்பாரதி , வெங்கடேசன் என ஆறு சுயேச்சை வேட்பாளர்களும் தற்போது களத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
Next Story