கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய இருவர் அதிரடி கைது
எடப்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய இருவர் அதிரடி கைது
எடப்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய இருவர் அதிரடி கைது
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் கோயில் மூலக்கடை பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல் கற்கள் வெட்டி டிராக்டரில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து வட்டாட்சியர் உத்தரவின் பேரில் சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் தாதாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அங்கு அனுமதி இன்றி கற்கள் வெட்டிக் கொண்டிருந்த மூன்று நபர்களிடம் வேலையை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த அந்த மூன்று நபர்களும் கிராம நிர்வாக அலுவலர் பார்த்து நீங்கள் யார் உங்களுக்கு ஐடி கார்டு இருக்கா அதை காட்டு பார்க்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தையில் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வந்ததால் அவர்கள் அங்கு இருந்து ஓடி விட்டனர். இதில் காயமடைந்த கிராம நிர்வாக அலுவலர்களை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இது தொடர்பாக கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கு சமுத்திரம் விஏஓ குமார் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய நபர்கள் பதுங்கி இருந்த இடம் சங்ககிரி டிஎஸ்பி ராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனடியாக அவரின் உத்தரின் பேரில் கொங்கணாபுரம் காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த புது பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (39) மணிகண்டன் (32) ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்தனர் அவர்கள் ரெண்டு பேர் மீது கொலை முயற்சி தாக்குதல், தகாத வார்த்தையால் திட்டியது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர முடிய செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags
Next Story