கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது!
காவல்துறை விசாரணை
சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.
கோவை கணபதி நகர் ஐ.ஓ.பி காலணி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.நேற்று ஐ.ஓ.பி காலணி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது TN-22-BU 8547 என்ற எண் கொண்ட பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்வராஜின் இடுப்பில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்து 1000 ரூபாயை பறித்து அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். செல்வராஜ் சத்தமிடவே அருகில் இருந்தவர்கள் பைக்கில் இருந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்து இருவரையும் வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசாரின் விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது வடவள்ளி கல்வீராம்பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத்(37) என்பதும் ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர் மீது ஏற்கனவே ஐந்து வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.மற்றொரு நபர் பெயர் ராஜசேகர் (35) என்பதும் உக்கடம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சப்ளையராக பணியாற்றி வருவதும் இவர் மீது நான்கு வழக்குகள் இருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story