பாலத்துறை அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மார்ச் 10ஆம் தேதி மாலை 5 மணி அளவில், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது வேலாயுதம்பாளையம் அருகே உள்ள பாலத்துறை வாய்க்கால் மேடு அருகே, பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட வேலாயுதம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த பாஸ்கர் வயது 24, வேலாயுதம்பாளையம் ஹை ஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 20 ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 100 ஐயும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.